இந்தியா, ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கான தூதர்களை பதவி நீக்கம் செய்வதாக உக்ரைன் அதிபர் Volodymyr Zelensky அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 4 மாதத்திற்கும் மேலாக தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இருப்பினும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.