இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் Kiren Rijiju தெரிவித்துள்ளார்.
அவுரங்காபாத்தில் உள்ள மகாராஷ்டிர தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.
இந்திய நீதித்துறையின் தரம் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டிருப்பதாக கூறிய அவர், இந்திய நீதிமன்றங்களில் ஒவ்வொரு நீதிபதியும் கூடுதல் நேரம் பணியாற்றுகிறார்கள் என்றார்.