காலே
ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறக்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர் . அடுத்து வந்த லபுசேன், ஸ்மித் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் .லபுசேன் சிறப்பாக ஆடி சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டிராவிஸ் ஹெட் 12 ரன்னிலும், கேமரூன் கிரீன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் . மறுபுறம் நிலைத்து ஆடிய ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 109 ரன்களுடன் ,அலெக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர் . இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்ய 3 விக்கெட்டும், ரஜிதா, மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. அலெக்ஸ் கேரி 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் . ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மித் 145 ரன் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது ஸ்மித் 145 ரன் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாஇலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பிரதாப் ஜெயசூர்யா முதல் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை கைப்பறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி தொடக்க வீரர் பதும் நிசாங்கா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.அடுத்து டிமுத் கருணாரத்னே ,குசால் மெண்டிஸ் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினார். நிலைத்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர்.
கருணாரத்னே 86 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.இறுதியில் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 184 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் 84 ரன்களும் ,மேத்யூஸ் 6 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.