இலங்கைக்கு செல்ல வேண்டாம் என தமது நாட்டு பிரஜைகளுக்கு மத்திய கிழக்கு நாடான பஹ்ரைன் அறிவுறுத்தியுள்ளது.
அதேசமயம் இலங்கையில் தங்கியிருக்கும் தமது நாட்டு பிரஜைகளை உடனடியாக நாடு திரும்புமாறும் அந்த நாடு கோரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கும் பஹ்ரைன்
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக தமது நாட்டுப் பிரஜைகளை அழைத்துள்ளதாக பஹ்ரைன் குறிப்பிட்டுள்ளது.
அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் அந்நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் இருக்கும் அதன் பிரஜைகள் தமது சொந்த பாதுகாப்பிற்காக உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும், அமைதியின்மை நிலவும் பகுதிகளில் பயணிப்பதை தவிர்க்குமாறும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.