கொழும்பு,
பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இன்று இலங்கை அதிபர் மாளிகையை நோக்கி வந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.
கொழும்பில் நடந்த அமைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று எனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வரும் 13-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தகவல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் மந்திரியாக இருந்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கரா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.