இலங்கை பிரதமர் வீடு தீ வைப்பு சம்பவம்: காரணங்கள் என்ன?

கொழும்பு : இலங்கை கடும் பொருளாதார சீரழிவில்சிக்கி தவித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஏற்பட்ட கலவரங்களால் அதிபர் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். பிரதமர் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டது.

இதற்கான காரணங்களில் சில பின்வருமாறு:

1. கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையில் ஏற்பட்ட பணபற்றாக்குறை காரணமாக இலங்கைக்கு எரிபொருட்களை ஏற்றுமதி செய்து வந்த நாடுகள் தங்களின் ஏற்றுமதி வர்த்தகத்தை நிறுத்தியது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கான பெட்ரோல் டீசல் கிடைப்பதில் மக்களிடையே அதிருப்தி நிலவியது.

2. இலங்கை பொருளாதார சீரழிவிற்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக் சே மீது பலர் குற்றம் சுமத்தினர். அவர் பதவி விலக வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் போராட்டம் துவங்கியது.

3. கடந்த70 ஆண்டுகளில்இல்லாத அளவிற்கு கடுமையான அன்னியச்செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டது. மோசமான நிதி பற்றாக்குறை காரணமாக 22 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட தேசம் போராட்டத்தில் களமிறங்கியது.

4. அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்களுக்கு மத்தியில், அதிபர் மற்றும் குடும்பத்தினர் போராட்டக்காரர்கள் தலைநகர் வருவதற்கு முன்னதாகவே அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு விட்டு அருகில் உள்ள அலுவலகங்களில் தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து இலங்கைக்கு சொந்தமான கடற்படை கப்பலில் சூட்கேஸ்கள், உடைமைகள் ஏற்றப்பட்டன.

5.. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நாடு முழுவதிலும் இருந்து இளைஞர்கள் தலைநகருக்கு பல்வேறு வாகனங்கள் மூலம் திரண்டு வந்தனர். அவர்களுடன் பொது மக்களும், இணைந்தனர். மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்களில் ஒரு சிலர் அதிபர் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் நீராடினர்.

6. முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர்களான சனத் ஜெயசூரியா,மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் வன்முறையை கைவிட்டு அமைதி காக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.

latest tamil news

7. கடந்த மே மாதம் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்கே கட்சி தலைவர்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

8. போராட்டக்காரர்களில் சிலர் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே இல்லத்தை நோக்கி வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில் கண்ணீர் புகைகுண்டு பிரயோகிக்கப்பட்டது. இருப்பினும் பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

9. பிதரமரின் சொந்த வாகனங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட இல்லத்தையும் பேராட்டக்காரர்கள் உடைத்து தீ வைத்துள்ளனர் இதனை பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

10. போராட்டக்காரர்களின் பல மாத போராட்டங்களுக்கு மத்தியில் வரும் புதன்கிழமை (13ம் தேதி) அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.