கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவுக்கு எதிராக, அந்நாட்டில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
எனினும், அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‘இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும்.
இலங்கையும் அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது. இலங்கையில் நெருக்கடி சூழலை சமாளிக்க இதுவரை 3.8 பில்லியன் டொலர்கள் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PC: Dinuka Liyanawatte/Reuters