மது போதையில் தள்ளாடி விழுந்த வட மாநில இளைஞர் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜவாதி ராமாராவ் ஆச்சாரி (32) என்ற இளைஞர் அவிநாசி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வார விடுமுறை நாளான இன்று அவிநாசியில் பொருட்கள் வாங்க வந்தவர், மது அருந்தியுள்ளார். மது போதை மிக அதிகமானதால் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு நிதானமின்றி பின்நோக்கி வளைந்தவாறு தள்ளாடி, தள்ளாடி நடக்கும் போது நிலைதடுமாறி திருப்பூரிலிருந்து சேயூர் நோக்கி செல்ல புறப்பட்ட அரசு டவுன் பஸ்ஸின் பின் சக்கரத்தில் விழுந்தார்.
இதில் அவரது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பிரேதத்தை கைப்பற்றிய போலீசார், உடலை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில், போலீசார் வைத்துள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த இளைஞர் மது போதையில் தடுமாறி விழுந்த பதற வைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM