உக்ரைனிய தானியங்களை ரஷ்ய படைகள் வேண்டுமென்றே எரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையால், உலக நாடுகளுக்கு மற்றும் ஐநாவின் பொது உணவுத் திட்டதிற்கு வழங்கப்பட வேண்டிய உணவு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் உலக அளவில் கடுமையான உணவு பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், ஏழை நாடுகளுக்கு ஐநா வழங்கும் ரேசன் பொருள்களின் அளவினை பாதியாக குறைக்கும் அளவிற்கு தள்ளியுள்ளது.
This is how a Russian incendiary munition falls to set fire to a Ukrainian field of grain
“It is not Ukrainian wheat that is on fire, it is the food security of the world that is on fire” – @DefenceU
📽️28th separate mechanized brigade https://t.co/yR3WMp51y6 pic.twitter.com/zA0JFGTSKa
— Euromaidan Press (@EuromaidanPress) July 9, 2022
இந்தநிலையில், உக்ரைனிய தானிய வயல்களுக்கு ரஷ்ய படைகள் வெடிமருந்து வைத்து முழுவதுமாக அழிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுத் தொடர்பாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு “தீப்பிடிப்பது உக்ரேனிய கோதுமை அல்ல, உலகின் உணவுப் பாதுகாப்பே தீயில் எரிகிறது” எனத் தெரிவித்துள்ளது.
Ukrainian farmers “seal off” burning part of field to save harvest
Location unknown. Russian occupiers are increasingly reported to purposefully set fire to Ukrainian grain fields
📽️ https://t.co/YUyTghHygw pic.twitter.com/c0i975CosX— Euromaidan Press (@EuromaidanPress) July 9, 2022
கூடுதல் செய்திகளுக்கு: சிறைப்பிடிக்கப்பட்ட ரயில் பெட்டிகள்: ரஷ்யா மற்றும் பெலாரஸ்க்கு உக்ரைன் வழங்கிய பலத்த அடி!
மேலும் வெளியாகியுள்ள மற்றொரு வீடியோவில் முடிந்த வரை தானியங்களை காப்பாற்றும் முயற்சியில் உக்ரைனிய விவசாயி ஒருவர் ஈடுபட்டு இருப்பதும் தெரிவந்துள்ளது.