உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இந்திய அணியில் மதுரையை சேர்ந்த 2 மாணவிகள் இடம்பிடித்துள்ளனர்.
ரேஷ்மாஸ்ரீ, ஸாகினி ஆகிய அந்த பத்தாம் வகுப்பு மாணவிகள், 8 ஆண்டுகளாக மாநில, தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளனர். அக்டோபர் மாதம் அர்ஜென்டினாவில் நடைபெறும் உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில், ரோலர் ஹாக்கி பிரிவில் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகி உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் இருவரையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளதால் அர்ஜெண்டா செல்வதற்கான பயண செலவை அரசு ஏற்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.