புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே மேலத்தானியத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் எரிவாயு கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் பேக்கரி உரிமையாளர் செந்தில் மற்றும் ஊழியர் ஒருவரும் பலத்த தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடைக்குள் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. எனினும் சிலிண்டர் வெடிக்காமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.
தகவல் அறிந்து சென்ற பொன்னமராவதி தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்த நிலையில் விபத்து குறித்து காரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.