எரிவாயு பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை

எரிவாயு பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக எரிவாயுவுடனான கப்பல் இன்று நாட்டின் கடல் எல்லைப்பகுதியை வந்தடையும். இந்த கப்பலில் 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கியுள்ளது. மேலும் 3,740 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான இரண்டாவது கப்பல் நாளை மாலை இலங்கை வரவுள்ளதாகவும் அவர் கூறினார்..

இன்று வந்த கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கை மற்றும் விநியோக நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 3இ200 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான 3வது கப்பல் எதிர்வரும் 15ம் திகதி நாட்டிற்கு வரவுள்ளது. இம் மாதத்திற்காக பெறுகை மேற்கொள்ளப்பட்ட எரிவாயுவின் அளவு 33 ஆயிரம் மெட்ரிக் தொன்களாகும். ஜுலை 13ம் திகதி தொடக்கம் காஸ் விநியோகம் வழமை போன்று இடம்பெறும். சமையல் எரிவாயு தொடர்பில் நிலவும் பிரச்சினைக்கு இம்மாதத்தில் முழுமையாக தீர்வு காணப்படும் என்று லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.