சமீபத்திய மாதங்களாகவே தொடர்ந்து ஐடி பங்குகள் சரிவினைக் கண்டு வருகின்றது. இது மேற்கொண்டு அழுத்தத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தைகள் பலவும் அழுத்தத்தினை எதிர்கொண்டு வரும் நிலையில், பொருளாதாரம் அழுத்தத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக குறுகிய காலத்தில் ஐடி பங்குகளில் சரிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவும்,இலங்கை பாகிஸ்தான் போல் தான்.. எச்சரிக்கும் நிபுணர்.. ஏன்?
பி எஸ் இ ஐடி குறியீடு
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 5.2% ஏற்றம் கண்டுள்ளது. இதன் வருவாய் வளர்ச்சி விகிதமானது அழுத்தத்தில் காணப்படுகிறது. இதற்கிடையில் நடப்பு ஆண்டில் இதுவரையில் கிட்டதட்ட 24% வரையில் பி எஸ் இ ஐடி குறியீடானது சரிவினைக் கண்டுள்ளது.
மார்ஜினில் தாக்கம்
மற்ற கரன்சிகளில் நிலவி வரும் அழுத்தம், அதிகளவிலான சம்பளம் ஏற்றம், திறமைக்கான பற்றாக்குறை என பல காரணிகளும் செயல்பாட்டு மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனை, இங்கிலாந்தில் நடந்து வரும் அரசியல் பிரச்சனைகள் என பலவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியவையாக உள்ளன. ரிஷி சுனக் அடுத்த பிரதமராக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் ஐடி பங்குகளில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என் ஆர் நாரயண மூர்த்தியின் மருமகன் ஆவார்.
அமெரிக்காவின் சூழல்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மேக்ரோ சூழல் மோசமடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வருகின்றது. ஆக இதுபோன்ற பல காரணிகளும் ஐடி துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரிவில் ஐடி பங்குகள்
நடப்பு ஆண்டில் இதுவரை டெக் மகேந்திரா 42.68% சரிவினைக் கண்டுள்ளது. விப்ரோ 41.38% சரிவினைக் கண்டுள்ளது. இதே ஹெச் சி எல் டெக்னாலஜி பங்கு விலையானது 25.38% சரிவினைக் கண்டுள்ளது.
இதே டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது முறையே 12.63% மற்றும் 19.87% சரிவினைக் கண்டுள்ளது.
பிஎஸ்இ ஐடி
இந்த ஆண்டில் சென்செக்ஸ்-ம் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் பிஎஸ்இ ஐடி 9046.44 புள்ளிகள் அல்லது 23.90% சரிவினைக் கண்டுள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச மதிப்பு 26,827.24 புள்ளிகளாகவும் இந்த ஆண்டு ஜனவரி 17 அன்று தொட்டது. இதே இதன் 52 வார உச்சத்தினை 38,713.3 புள்ளிகளையும் தொட்டது.
சென்செக்ஸ்
இதே சென்செக்ஸ் நடப்பு ஆண்டில் இதுவரையில் 3771.98 புள்ளிகள் அல்லது 6.47% சரிவினைக் கண்டுள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 50,921.22 புள்ளிகளை தொட்டது. இது ஜூன் 17 அன்று தொட்டது.
நிபுணர்களின் கணிப்பு என்ன?
ஐடி நிறுவனங்களின் மார்ஜின் விகிதமானது அழுத்தத்தில் காணப்படுகிறது. இதனால் ஐடி பங்குகளின் பங்கு விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
IT shares may remain under pressure amid global headwinds
IT shares may remain under pressure amid global headwinds/ஐடி பங்குகளை வாங்கி போறீங்களா.. வாங்கியிருக்கீங்களா.. கண்டிப்பா இதை படிங்க!