மைசூரு : இரண்டு ஆண்டுகளாக, ஒரே வீட்டை குறி வைத்து ஒற்றை யானை, அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது. வீட்டில் உயிர் பயத்துடன் வசிக்கின்றனர்.மைசூரு ஹுன்சூரின், ஹனகோடு பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்களில், காட்டு யானைகளின் தொந்தரவு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
நேரலகட்டே கிராமத்தின், பிரதான சாலை ஓரத்தில் திம்மஷெட்டா என்பவரின் வீடு உள்ளது. நேற்று முன் தினம், இங்கு வந்த ஒற்றை யானை, வீட்டின் முன் பகுதி சுவர், மேற்கூரையின் சிமென்ட் ஷீட்களை உடைத்து சேதப்படுத்தியது. கொட்டகையில் இருந்த ஆடுகளை, தாக்கி காயப்படுத்தியது. திம்மஷெட்டா வீட்டினரின் அலறல் சத்தம் கேட்டு, அவ்வழியாக சென்றவர்கள், அங்கு வந்து யானையை விரட்டினர். ஒற்றை யானைக்கு, திம்மஷெட்டா மீது என்ன கோபமோ தெரியவில்லை.
இரண்டு ஆண்டுகளாக இவரது வீட்டின் மீதே, அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது.நேரலகட்டே கிராமத்தில், ஒற்றை யானையின் தொந்தரவு அதிகரித்துள்ளது. இரவு, பகல் என எந்த நேரத்திலும், ஊருக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்துகிறது. தேவையானதை வயிறு புடைக்க தின்று, காட்டுக்கு திரும்புகிறது. மக்கள் உயிர் பயத்துடன் வாழ்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement