கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி நிறுவன ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். இன்னும் ஒரு தரப்பு ஹைபிரிட் மாடலிலும் பணியாற்றி வருகின்றனர்.
எனினும் தற்போது நிறுவனங்கள் ஊழியர்களை திரும்ப அலுவகத்திற்கு அழைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கு என்ன சொல்லப்போகிறது என ஊழியர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
புள்ளி கோலங்களையே வருமானம் ஆக்கிய தீபிகா.. மாதம் ரூ.75,000 வருமானம்.. அசத்தும் ஸ்ரீரங்கம் பெண்!
அலுவலகத்திற்கு வெளியே பணி
டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் சமீபத்தில் அதன் 6 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களில் 20% பேர் தங்களுக்கு நியமிக்கப்பட்ட அலுவலகத்தில் இருந்து 20% பேர் வெளியே வேலை செய்கிறார்கள்.
எனினும் கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்களை மீண்டும் அலுவலகத்தினை அழைக்க தீவிரம் காட்டி வருகின்றது.
ஹைபிரிட் மாடல்
எனினும் நிறுவனம் 2025ம் ஆண்டிற்குள் 25/25 ஹைபிரிட் ஒர்க் மாடலை அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றது.
டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபி நாதன், அதன் காலாண்டு அறிக்கையினை அறிவித்த பிறகு, கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடையும் வரை அல்லது குறைந்தபட்சம் 80% வரையில் அலுவலகத்திற்கு திரும்புவதை ஊக்குவிக்கும் என அறிவித்துள்ளது.
25/25 மாடல் எப்போது?
அதன் பிறகு டிசிஎஸ்-ன் 25/25 மாடல் பணி அமல்படுத்தப்படும். எனினும் அதற்கான பாதை முதலில் மிகவும் இயல்பான பணிச் சூழலுக்கு திரும்புவதும், அதன் பின்னர் நிரந்தரமாக ஹைபிரிப் மாடல் பணியினை அமல்படுத்துவதும் இருக்கும்.
படிப்படியாக அதிகரிக்கும்
நாங்கள் தொடர்ந்து 50 – 60 – 70 – 80% பேருக்கு படிப்படியாக அதிகரிக்கலாம். இனி ஒவ்வொரு மாதமும் படிப்படியாக நிலையான மாற்றத்தினை காணும் என்றும் கூறியுள்ளார்.
டிசிஎஸ் நிறுவனம் ஏப்ரல் 2020ல் 25/25 மாடலை அறிவித்தது. இதன் மூலம் அதன் மொத்த ஊழியர்களில் 25% பேர் மட்டுமே அலுவலகம் வரவேண்டும். இதே 25% உயர் அதிகாரிகள் 25% நேரம் மட்டுமே அலுவலகத்தில் நேரத்தினை செலவிட வேண்டும். ஒவ்வொரு திட்டத்திற்கும் 25% ஊழியர்கள் மட்டுமே அலுவலத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும்.
மூத்த அதிகாரிகள் எப்போது?
நாங்கள் எங்கள் மூத்த அதிகாரிகள் உடன் தொடங்குகிறோம். முதலில் 50,000 மூத்த அதிகாரிகள் அலுவலகத்திற்கு வருவார்கள். இந்த மாதத்தில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வரத் தொடங்குவார்கள். அதன் பிறகு மீண்டும் இந்த எண்ணிக்கையை மெதுவாக தொடர்ந்து அதிகரிப்போம். ஆக இது இந்த ஆண்டின் நடுப்பகுதியில் 80:20 ஆக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
TCS work from home to end soon? What does TCS say?
TCS work from home to end soon? What does TCS say?/ஒர்க் பிரம் ஹோம் முடியப் போகுதா.. 25/25 திட்டம் எப்போது.. டிசிஎஸ்-ன் மெகா திட்டம்!