காங்கசந்துறையில் இருந்து கிளிநொச்சி வரையிலான ‘யாழ் ராணி’ என்ற புதிய அலுவலக ரயில் சேவை நாளை (11) ஆரம்பமாகவிருப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் திரு.தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எமது செய்தி பிரிவுக்கு ரயில்வே பொது முகாமையாளர் தெரிவிக்கையில் காங்கசந்துறைக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு தினசரி அலுவலக ரயில் சேவை இவ்வாறு ஆரம்பிக்கப்படுவதாக தெரிவித்தார்.
காங்கேசன்துறைக்கும் முறிகண்டிக்கும் இடையிலான இந்த ரயில் சேவை தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் நாளை காலை 6.40மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்த ரயில் காங்கேசன்துறைக்கும் முறிகண்டிக்கும் இடையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்படும்.
‘யாழ் ராணி’ ரயில் சேவை நாளாந்தம் காங்கேசன்துறையில் இருந்து காலை 6மணிக்கு முறிகண்டியை நோக்கி புறப்படும். கிளிநொச்சியில் இருந்து காங்கேசன்துறைக்கு முற்பகல் 10 மணிக்கு புறப்படும்.