கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் நிஷாத் அஹ்மத், சண்முகி, அலீனா, சஜான், ரித்தின் மற்றும் சுப்ரீத் ஆகியோர் நேற்றிரவு சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது இன்று அதிகாலை 4 மணி அளவில் மின்னூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சண்முகி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
மேலும் காரில் வந்த மற்ற ஐந்து பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.