உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் தென் ஆப்பிரிக்க வீரர் ரைலி ரூஸோ ஒரே ஓவரில் 36 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் ரைலி ரூஸோ, கிளப் அணியான சோமர்செட்டில் விளையாடி வருகிறார்.
இங்கிலாந்தின் டயூடோன் நகரில் நேற்று நடந்த போட்டியில், சோமர்செட் அணி 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெர்பிஷைர் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ரைலி ரூஸோ 36 பந்துகளில் 93 ஓட்டங்கள் விளாசினார். இதில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும்.
PC: Reddit
எதிரணி வீரர் மெக்கியார்னன் வீசிய ஓவரை விளாச ஆரம்பித்த ரூஸோ ஐந்து சிக்ஸர், ஒரு பவுண்டரி என 34 ஓட்டங்கள் விளாசினார். அதில் இரண்டு பந்துகள் நோ-பால் ஆக வீசப்பட்டதால் சோமர்செட் அணிக்கு ஒரே ஓவரில் 36 ஓட்டங்கள் கிடைத்தது.
சோமர்செட் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 265 ஓட்டங்கள் குவித்தது. டெர்பிஷைர் 74 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனதால், 191 ஓட்டங்கள் மிகப்பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சோமர்செட் அணி சாதனை படைத்தது.