பெங்களூரு : ”சித்தராமையாவுக்கு, தேர்தல் முடிந்த அத்தியாயம். அவரது இறுதி தேர்தலில் தோற்பது உறுதி,” என பா.ஜ., தெரிவித்துஉள்ளது.இது தொடர்பாக, டுவிட்டரில் பா.ஜ., நேற்று கூறியதாவது:அடுத்த முறை, எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், சித்தராமையா தோற்பது உறுதி. அது, அவரது கடைசி தேர்தல் என்பதில், மாற்று கருத்தே இல்லை. அவருக்கு தேர்தல் முடிந்த அத்தியாயம்.இவரது தோல்விக்கு, காங்கிரசாரே காரணமாக இருப்பர் என்பதை மறக்கக்கூடாது. நீங்கள் (சித்தராமையா) கைத்தடி பிடிக்க வேண்டியதில்லை.
மக்களே பிடிக்க வைப்பர். 2023 வரை காத்திருக்காதீர்கள். இப்போதே கைத்தடி தேடிக்கொள்ளுங்கள்.உங்களின் கட்சி தலைவர்கள், வாக்காளர்கள் உங்களை கைப்பிடிக்க மாட்டார்கள். இறுதியாக உங்களிடம் கைத்தடி மட்டுமே எஞ்சியிருக்கும்.ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதும், சித்தராமையாவுடையது அதே ராகம், அதே தாளம்தான்.’இது எனது கடைசி தேர்தல்’ என கூறுவதை, வழக்கமாக வைத்துள்ளார். மக்களே உங்கள் அரசியலுக்கு, முற்றுப்புள்ளி வைப்பர். உங்களுடையவர்களும் உங்களை காப்பாற்ற முடியாது.
சித்துவின் அக்கம், பக்கத்திலேயே எதிரிகள் உள்ளனர். பரமேஸ்வர், சிவகுமார், முனியப்பா, மல்லிகார்ஜுன கார்கே, தேஷ்பாண்டே, சிவசங்கரப்பா என பட்டியல் நீண்டு கொண்டே போகும். உங்கள் தோல்விக்கு காரணமானவர்களை, வேறு கட்சியில் தேட வேண்டாம்.சாமுண்டீஸ்வரியில் தோற்றார்; பாதாமியிலும் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த முறை தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் வெற்றி பெற முடியாது. இவரது வாழ்க்கையில், தேர்தல் முடிந்த அத்தியாயம். இதை நாங்கள் கூறவில்லை. உங்கள் கட்சி தலைவர்களின் விருப்பம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement