சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா படப்பிடிப்பில் இணைந்த ஸ்ருதிஹாசன்
தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், அதையடுத்து கோவிந்த் மாலினேனி பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கும் அவரது 107வது படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து பாபி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் வால்டேர் வீரய்யா என்ற படத்தில் கமிட்டாகி இருந்த ஸ்ருதிஹாசன் இன்று முதல் அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
சிரஞ்சீவி உடன் இணைந்து அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மாஸான கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிரஞ்சீவி வால்டேர் வீரய்யாவாக நடிக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி உடன் நடித்த லாபம் படத்திற்கு பிறகு எந்த புதிய படத்தில் நடிக்காத ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் மூன்று படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.