நுழைவு கதவில் ஏறி ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் குதித்த தபாரே என்ற இளைஞன் தனது அனுபவத்தை விபரித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்குள் சென்ற போது அங்கிருந்த படையினர் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் துப்பாக்கியால் சுடுவார்கள் என்று தெரிந்தும் அச்சமின்றி உள்ளே குதித்ததாகவும் தபாரே கூறியுள்ளார்.
மரணப்பயம் இன்றி உள்ளே குதித்தோம்
இளைஞன் என்ற வகையில் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்டு வருகின்றேன்.கோட்டாபயவை வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருந்தோம்.
ஆறு தடைகளை உடைத்துக்கொண்டே நாங்கள் உள்ளே வந்தோம்.
இது யுத்தம் போன்றது. ஜகத் என்ற சகோதருடன் நுழைவு கதவுக்கு மேல ஏறி உள்ளே குதித்தோம்.
அப்போதுதான் என்னை நாய்களை தாக்குவது போல் தாக்கினர். மரணப் பயம் இருந்திருந்தால், நாங்கள் உள்ளே குதித்து இருக்க மாட்டோம்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ஆசனத்தில் முதலில் நானே அமர்ந்தேன்
துப்பாக்கி சூடு நடத்துவார்கள் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் அச்சமின்றி ஏனையோரையும் வருமாறு கூறினோம்.நானே முதலில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ஆசனத்திலும் அமர்ந்தேன்.
கோட்டா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு.நாங்கள் 13 யோசனைகளை முன்வைத்துள்ளோம். அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தாபரே தெரிவித்துள்ளார்.