வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கிராமங்களில் மாற்றங்களை கொண்டு வர முடியாது எனக்கூறியவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றி சரியான பதிலடியை கொடுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத்தின் சூரத் நகரில் இயற்கை விவசாயம் தொடர்பான கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடு பல்வேறு இலக்குகளை நோக்கி செயல்பட துவங்கி உள்ளது. வரும் நாட்களில் வர உள்ள மிகப்பெரிய மாற்றத்திற்கு அடித்தளம் ஆக அது இருக்கும். கிராமங்கள் மற்றும் ஏழைகளுக்காக செய்யப்படும் பணிகளுக்கான பொறுப்பு குடிமக்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில், உங்களின் முயற்சிகள் மற்றும் அனுபவத்தால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஏராளமானவற்றை கற்று கொள்வார்கள் மற்றும் புரிந்து கொள்வார்கள். சூரத் நகரில் இருந்து வெளிப்படும் இயற்கை விவசாய முறை, நாடு முழுவதும் ஒரு முன்மாதிரியாக இருக்கும். கிராமங்களில் மாற்றங்களை கொண்டு வருவது எளிதல்ல எனக்கூறியவர்களுக்கு , டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றி சரியான பதிலடி கொடுத்துள்ளது. கிராமங்களில் மாற்றங்களை கொண்டு வருவதோடு, மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என்பதை கிராமங்கள் நிரூபித்துள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement