தங்கம் விலை இன்னும் குறையலாம்.. வாங்க தயாரா இருங்க.. நிபுணரின் பலே கணிப்பு..!

தங்கத்தினை பிடிக்காத பெண்கள் உண்டா எனில் நிச்சயம் இருக்காது. பெண்கள் அதிகம் விரும்பும் ஆபரணமாக மட்டுமல்லாமல், முதலீடுகளிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கும் அம்சமாக உள்ளது.

ஆக அப்படி இருக்கும் தங்கம் விலை நடப்பு வாரத்தில் ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது. எனினும் முடிவில் சற்று சரிவிலேயே காணப்பட்டது.

வரும் வாரத்திலும் இது சற்று சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவும்,இலங்கை பாகிஸ்தான் போல் தான்.. எச்சரிக்கும் நிபுணர்.. ஏன்?

முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு

முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு

ஆக தங்கத்தினை குறைந்த விலையில் வாங்கவும், முதலீடு செய்யவும் சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜூலை 13 அன்று வெளியாகவுள்ள அமெரிக்காவின் பணவீக்க தரவின் மத்தியில் இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். இது தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் Vs பணவீக்கம் Vs தங்கம்

டாலர் Vs பணவீக்கம் Vs தங்கம்

தங்கம் விலையானது நடப்பு வாரத்தில் 2% மேலாக சரிவில் காணப்பட்டது. அதேசமயம் அமெரிக்க டாலரின் மதிப்பும் அதன் இரு தசாப்தங்களுக்கு மேலாக உச்சத்தில் இருந்து சரிவில் காணப்பட்டது. எனினும் வரவிருக்கும் வாரத்தில் டாலர் மதிப்பு, நுகர்வோர் விலை குறியீடு, ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி குறித்தான முக்கிய முடிவு என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

தங்கம் விலை குறையலாம்
 

தங்கம் விலை குறையலாம்

டாலர் மதிப்பு ஏற்றம், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பலவும் தங்கம் விலை சரிய காரணமாக அமையலாம். சர்வதேச அளவில் தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இது தங்கம் விலை சரிய காரணமாக அமையலாம்.

முதலீடுகள் குறையலாம்

முதலீடுகள் குறையலாம்

டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்தால், இது டாலரின் தங்கத்தினை வாங்கும், மற்ற நாணயதாரர்களுக்கு விலை அதிகமானதாக மாற்றலாம். இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். வரவிருக்கும் வாரத்தில் டாலரின் மதிப்பு மேற்கொண்டு அதிகரிக்கலாம்.

 40 வருடங்களில் இல்லாத அளவு உச்சம்

40 வருடங்களில் இல்லாத அளவு உச்சம்

வரும் வாரத்தில் வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவானது, முதலீட்டாளர்கள் மிகவும் கவனம் கொள்ளும் ஒன்றாக உள்ளது. ஜூன் மாதத்தில் 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு 8.8% லெவலை எட்டலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

எவ்வளவு குறையலாம்

எவ்வளவு குறையலாம்

இதன் காரணமாக இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது சற்று அழுத்தத்தில் இருக்கலாம். இது 50,900 ரூபாய் என்ற லெவலுக்கு கீழாக வர்த்தகமானால், அது அடுத்தாக 49,900 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என ஐசிஐசிஐ டேரக்ட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Experts predict that the price of gold may decrease in the coming week?

Experts predict that the price of gold may decrease in the coming week?/தங்கம் விலை இன்னும் குறையலாம்.. வாங்க தயாரா இருங்க.. நிபுணரின் பலே கணிப்பு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.