விண்வெளி கொள்கை 2022-ன் அடிப்படையில், தனியார் நிறுவனங்களும் புகைப்படம் எடுக்கக்கூடிய வகையிலான செயற்கைகோள்களை சொந்தமாக வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ மற்றும் பாதுகாப்புத்துறையை தொடர்ந்து, தனியார் நிறுவனங்களுக்கு இந்த வசதி அனுமதிக்கப்படுகிறது. புதிய விண்வெளி கொள்கை, தனியார் துறையினர் செயற்கைக்கோள்களை சொந்தமாக வைத்துக்கொள்ள அனுமதிப்பதுடன், அவற்றை ஏவுவதற்கான ராக்கெட் ஏவுதளத்தையும் அமைத்துகொள்ள வழிவகை செய்கிறது.