தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ஐதராபாத், நிஜாமாபாத் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், மழை காரணமாக தெலங்கானாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.