இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டின் படுக்கையில் படுத்தபடி இலங்கையர் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சமடைந்துள்ள நிலையில் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக கோரி மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதையடுத்து கோட்டாபய பதவி விலகவுள்ளார். இந்த நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள் கோட்டாபயவின் வீடு மற்றும் அலுவலகத்திற்குள் புகுந்தனர்.
Protesters are continuing to occupy both President’s house and office : “Mr. President, Thank you.I am sleeping on your bed, it’s very comfortable” says a protester pic.twitter.com/1lC4zgGolv
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 9, 2022
வீட்டின் நீச்சல் குளம், குளியலறையில் போராட்டக்காரர்கள் குளிக்கும் வீடியோக்கள், ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோக்கள், சமையலரைக்குள் புகுந்து சாப்பிடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
அதேபோல் கோட்டாபயாவின் கட்டில் மெத்தையில் படித்திருந்த நபர், நன்றி ஜனாதிபதி, நான் உங்கள் படுக்கையில் தூங்குகிறேன், மிகவும் வசதியாக உள்ளது என வீடியோ வெளியிட்டுள்ளார்.