நீட் தேர்வு ஹால் டிக்கெட்: டவுன்லோட் செய்வது எப்படி?

NEET exam UG 2022 How to download Hall ticket?: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இவற்றில் இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நீட் தேர்வு வருகின்ற ஜுலை 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.

NEET (UG) 2022 தேர்வு ஜூலை 17 அன்று மதியம் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற உள்ளது. நீட் (யுஜி) தேர்வு நாடு முழுவதும் 546 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடைபெறும். ஏறக்குறைய 18 லட்சம் பேர் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நீட் தேர்வு நடைபெறும் நகரங்கள் குறித்த தகவல்கள் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: மாணவ, மாணவிகள் ஷாக்… பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு நடைமுறை ரத்து!

இதற்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதனை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பதை பார்ப்போம்.

டவுன்லோட் செய்வது எப்படி?

அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் உள்நுழைய வேண்டும்.

முகப்புப் பக்கத்தில், ADMIT CARD NEET (UG) -2022″ என்பதைக் கிளிக் செய்யவும் (இணைப்பு செயல்படுத்தப்பட்ட பிறகு)

உங்கள் பயனர் ஐ.டி மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டு உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்

உங்கள் NEET (UG) 2022 அனுமதி அட்டைகள் (ஹால் டிக்கெட்) காண்பிக்கப்படும்.

அதை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

தேர்வு நகர அறிவிப்புச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் அல்லது சரிபார்க்கும் போது ஏதேனும் சிரமத்தை எதிர்கொள்ளும் விண்ணப்பதாரர்கள் 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

NEET (UG) 2022 உருது, ஆங்கிலம், இந்தி, மராத்தி, அஸ்ஸாமி, ஒடியா, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி, தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் நடத்தப்படும். NEET UG 2022 நான்கு பாடங்களைக் கொண்டிருக்கும் என்பதை மாணவர்கள் கவனிக்க வேண்டும்; இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல். ஒவ்வொரு பாடத்திலும் 50 கேள்விகள் இரண்டு பிரிவுகளாக (A மற்றும் B) பிரிக்கப்படும். தேர்வுக்கான கால அளவு 200 நிமிடங்கள் (03 மணி 20 நிமிடங்கள்).

விண்ணப்பதாரர்களின் தகவலுக்கு, NEET UG 2022 இல் சரியான பதிலுக்கு, விண்ணப்பதாரர்கள் நான்கு மதிப்பெண்களைப் பெறுவார்கள், தவறான பதிலுக்கு, விண்ணப்பதாரர்கள் மூன்று மதிப்பெண்களைப் பெறுவார்கள். பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு பூஜ்ஜிய மதிப்பெண்கள் இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.