புதுடெல்லி: சர்வர் பிரச்னையால் பல மாநிலங்களில் யுஜிசி நெட் தேர்வு துவங்க 3 மணி நேரம் தாமதமானது.இந்தியப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக, பல்கலைக் கழக மானியக் குழுவால், தேசிய அளவில் ‘நெட்’ என்ற பெயரில் பொது தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2022 ஜூன் ஆகிய 2 வருட தேர்வுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இம்முறை ஒன்றாக நடத்துகிறது. நெட் முதல் நாள் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில் சர்வர் பிரச்னையால் பல்வேறு மையங்களில் காலை 9 மணிக்கு துவங்க வேண்டிய தேர்வு 3 மணி நேரம் தாமதமாக துவங்கியது. ஒடிசா, பீகார், உபி, தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பிரச்னை ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.