பக்ரித் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துச் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தப் பண்டிகை தியாகம் மற்றும் மனித சேவையின் சின்னம் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில், மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.