புதுடில்லி: நாடு முழுவதும் இன்று பக்ரீத் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதுடன் அனைத்து பள்ளிவாசல்களிலும் , முக்கிய நகர மைய இடங்களிலும் முஸ்லிம் மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி, பிரதமர் :
பக்ரீத் பண்டிகைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில்:
அனைத்து நாட்டு மக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஈத்-உல்-அதா நல்வாழ்த்துக்கள். இந்த பண்டிகை தியாகம் மற்றும் மனித சேவையின் அடையாளமாகும். மனித குலத்தின் சேவைக்காக நம்மை அர்ப்பணித்து, நாட்டின் செழிப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபட இந்த சந்தர்ப்பத்தை எடுத்துக்கொள்வோம்.
பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ஈத் முபாரக்! ஈத்-உல்-அதா நல்வாழ்த்துக்கள். மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழிப்புக்கான உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நமக்கு ஊக்கம் தரட்டும்.
காங்., தலைவர் ராகுல்
காங்., தலைவர் ராகுல் அவரது வாழ்த்தில் ; ஈத்-உல்-அதா இன்நன்நாளில் அனைவருடனும் ஒற்றுமை மற்றும் செழிப்பும், அமைதியும் கொண்டு வரட்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில்:
ஈத்-உல்-அதா பண்டிகைக்கு வாழ்த்துக்கள். இந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும் என்று நம்புகிறேன். அனைவரும் நலமாக, ஒற்றுமையாக வாழட்டும். ரமலான்!
காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது வாழ்த்தில்; அனைவருக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்கள். இது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாள், எங்கள் பிரார்த்தனைகள் அனைத்துக்கும் பதிலளிக்கப்படும் .
தமிழக முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்;
தமிழகத்தில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்! அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உயரிய கோட்பாடுகளோடு, நபிகள் நாயகம் அளித்த போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் இந்தப் பக்ரீத் பண்டிகையை ஆண்டு தோறும் கொண்டாடுகிறார்கள். நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும்; கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, தியாகப் பெருநாளைப் பாதுகாப்புடன் கொண்டாடிட வேண்டும் எனக்கேட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலக மசூதிகள்
உலகம் முழுவதும் உள்ள முக்கிய மசூதிகளை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்