பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எடப்பாடி பழசாமி எழுதிய வெளியிட்ட செய்தியிலும், பன்னீர் செல்வம் வெளியிட்ட வாழ்த்து செய்தியிலும் பல ஓற்றுமைகள் கொண்டாதாக இருக்கிறது.
பக்ரீத் திருநாள் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது, இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்தை முன்னதாகவே தெரிவித்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தனித் தனியே வாழ்த்து தெரிவித்து செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இவருவரின் வாழ்த்து செய்திகளிலும் சில வார்த்தைகள் மட்டுமே மாறுபட்டிருக்கிறது. மற்ற வார்த்தைகள் எல்லாம் ஒருபோலவே காணப்படுகிறது. அதிமுக, இரட்டை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. கட்சியில் தன் நிலையை தக்கவைத்து கொள்ள ஓ. பன்னீர் செல்வம், நீதிமன்றம், தேர்தல் அணையம் வரை சென்றார். இரண்டாவது பொதுக்குழு கூட்டப்படும் என்று எடப்பாடி பழன்சாமி தரப்பு திட்டவட்டமாக இருக்கிறது. இந்நிலையில் எந்த நொடியில் என்ன திருப்புமுனை நடக்கும் என்று யாருக்கும் தெரியாத நிலை நிலவுகிறது.
”தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த “பக்ரீத்” திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத் தான்.
நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்றத் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலை நிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் பக்ரீத் திருநாளை, கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மகிழ்ச்சியோடு கொண்டாடுமாறு கேட்டுக் கொள்வதுடன், இந்த இனிய திருநாளில் எல்லோரிடத்திலும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனித குல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தி செய்தி வெளியிட்டுருந்தார்.
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் வாழ்த்து செய்தியும் இதுபோலவே இருந்தது. ஆனால் கூடுதலாக துரோகம் என்ற வார்த்தையும். சதிகளால் ஏற்படும் தடைகளை எப்படி அன்பு மூலம் வென்றடைவது போன்ற வார்த்தைகளும் பன்னீர் செல்வத்தின் செய்தியில் இடம்பெற்றிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“