திருமண பதிவு இணைய தளத்தில், பணக்கார வரனை தேடப்போய் இளம்பெண் ஒருவர் 36 லட்சம் ரூபாயை பறிகொடுத்தார்.பெங்களூரில் உள்ள டி.சி., பாளையாவை சேர்ந்தவர் யாமினி, 27. இவர் திருமணத்துக்காக மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். ‘மணமகன் நல்ல வசதியுடன் இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்த ஒருவர், பிப்ரவரி 27ல் இவரை தொடர்பு கொண்டார்.தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறேன்; திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். இருவரும் மொபைல் போனில் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்து வந்தனர்.இந்நிலையில், அறிமுகமான சில நாட்களிலேயே, தான் வேலை விஷயமாக கலிபோர்னியா செல்ல வேண்டும்; அதற்கு பணம் தேவைப்படுகிறது; அதை அளித்தால் அங்கு சென்றவுடன் திருப்பி தருகிறேன் என அந்நபர் கூறினார்.
இதை நம்பிய இளம்பெண்ணும், கொஞ்சம், கொஞ்சமாக 36 லட்சத்து 88 ஆயிரத்து 994 ரூபாய் அனுப்பி இருந்தார். ஆனால், பணம் வாங்கி பல மாதமாகியும் திருப்பி தரவில்லை. திருமணத்துக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை.இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த இளம்பெண், சைபர் கிரைம்போலீசில் புகார் செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement