அசாமில் மாபியா மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரின் செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
திப்ரூகரில் மாபியா மிரட்டல் குறித்து ஏற்கெனவே புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் மீண்டும் அச்சுறுத்தல் வந்ததால் மிரட்டியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு வீடியோவைப் பதிவுசெய்துவிட்டு இளம் வணிகர் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து அறிந்த முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைத் தன்னுடன் அழைத்துச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்தார்.