பெங்களூரு : ”வாரிசு அரசியல், ஜாதி அரசியலால் சிக்கி தவிக்கும் காங்கிரஸ் அழிவு நிலைக்கு சென்று கொண்டுள்ளது. சித்தராமையா, சிவகுமார் இடையே நாற்காலி போர் ஆரம்பித்துள்ளது. சித்தராமோற்சவம் நடந்த பின், மாநில காங்கிரஸ் இரண்டாக பிளவுப்படும்,” என மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல் கணித்துள்ளார்.
கர்நாடகாவில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில், ஹாசனில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மாநில பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பேசியதாவது:நாட்டை 60 ஆண்டுகள் காலம் ஆட்சி புரிந்த காங்கிரஸ், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக நிவாரண நிதி செலுத்தவில்லை. கிராமிய பெண்களுக்கு சமையல் காஸ் வழங்கவில்லை.ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன், இலவச காஸ் இணைப்பு, வீடுதோறும் வங்கி கணக்கு, கழிப்பறை, குடிநீர் குழாய் இணைப்பு, சுகாதார திட்டம் என பிரதமர் நரேந்திர மோடி அரசு மக்கள் நல திட்டங்கள் அமல்படுத்திகொண்டே உள்ளது.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை சமூகத்தில் முன்னிலைப்படுத்தும் பணியை பா.ஜ., செய்கிறது. இந்திய மூவர்ண கொடிக்கு உலகமே கவுரவம் கொடுக்கும் காலம் வந்துவிட்டது. பள்ளி பாடப்புத்தகங்களில் எந்த மகான்கள் குறித்த பாடத்தையும் கைவிடவில்லை.பா.ஜ., மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஊழலால் காங்கிரசை மக்கள் தோற்கடித்தனர். பாதுகாப்புடன் வாழ பா.ஜ., தான் சிறந்த கட்சி என்று மக்கள் தீர்மானித்துவிட்டனர்.வாரிசு அரசியல், ஜாதி அரசியலால் சிக்கி தவிக்கும் காங்கிரஸ் அழிவு நிலைக்கு சென்று கொண்டுள்ளது.
சித்தராமையா, சிவகுமார் இடையே நாற்காலி போர் ஆரம்பித்துள்ளது. சித்தராமோற்சவம் நடந்த பின், மாநில காங்கிரஸ் இரண்டாக பிளவுப்படும்.சட்டசபை தேர்தலின் போது, இரண்டு குழுக்களையும் எதிர் குழுக்கள் தோற்கடிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement