பிளாஸ்டிக்குக்கு மாற்றாக புதிய பைகள்; மைசூரின் ஆய்வகம் கண்டுபிடிப்பு| Dinamalar

மைசூரு : மத்திய அரசு, தரமற்ற பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளது. எனவே மாற்று பைகள் தயாரிப்பதில், மைசூரின் உணவு பாதுகாப்பு பரிசோதனை ஆய்வகம் ஈடுபட்டுள்ளது.பிளாஸ்டிக் மண்ணில் எளிதில் கரையாது; அழுகவும் செய்யாது; இது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது. இதை மனதில் கொண்டு, நாடு முழுவதும் பிளாஸ்டிக்கை தடை செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு ஜூலை 1 முதல், அமலுக்கு வந்துள்ளது.கர்நாடகாவிலும், இந்த உத்தரவு கடுமையாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் மைசூரின், உணவு பாதுகாப்பு பரிசோதனை ஆய்வகம், பிளாஸ்டிக்குக்கு மாற்றாக, சுற்றுச்சுழலுக்கு பாதிப்பில்லாத பிளாஸ்டிக் பைகளை கண்டுப்பிடித்துள்ளது.ஆய்வக விஞ்ஞானிகள் கூறியதாவது:பார்ப்பதற்கு பிளாஸ்டிக் போன்று தென்பட்டாலும், 180 நாட்களில் மண்ணில் அழுகிப்போகும். சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து, இப்பைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த தொழில்நுட்பத்தில், தயாரிக்கப்பட்ட உணவு தட்டு, தம்ளர், ஸ்பூன், உணவு பொட்டலங்கள் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஆய்வக விஞ்ஞ்ஞானிகள், ஆறு மாதங்கள் ஆராய்ச்சி செய்து, இது போன்ற பிளாஸ்டிக் பைகளை தயாரித்துள்ளனர்.இவற்றின் பயன்கள் குறித்து, மக்களுக்கு விவரிக்கும் நோக்கில் சாமுண்டி மலையில், பிரசாதம் வினியோகிக்க, 5,000 பைகள் வழங்கப்படும். நஞ்சன்கூடின் ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில், ஸ்ரீரங்கப்பட்டணா ரங்கசுவாமி கோவில் உட்பட, மற்ற கோவில்களுக்கும் வழங்கப்படும். இது வெற்றியடைந்தால், வரும் நாட்களில் மால்கள், கடைகளுக்கு வழங்க ஆலோசிக்கிறோம்.வீட்டில் உருவாகும் ஈரக்குப்பையை, பிளாஸ்டிக் கவர்களில் போட்டு, மாநகராட்சியின் துப்புரவு தொழிலாளர்களிடம் அளிக்கின்றனர். இதை தரம் பிரிப்பது, தொழிலாளர்களுக்கு சவாலாக உள்ளது.

ஆய்வகம் தொழில்நுட்பத்துடன் தயாரித்த, கைப்பைகளை பயன்படுத்தினால், வீட்டிலேயே கரைய வைத்து, உரம் தயாரிக்கும்.இந்த கைப்பையில், ஐந்து கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்லும் திறன் கொண்டுள்ளது. பொதுவாக இதே அளவு துணிப்பையின் விலை, 10 ரூபாய் முதல் 15 ரூபாய் இருக்கும். ஆனால் ஆய்வகம் தயாரித்த பையின் விலை, வெறும் இரண்டு ரூபாய்தான். மண்ணில் எளிதில் கரைவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. குப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.