சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக பெண்கள் மத்தியில் இது மிக அதிகமாகவே இருக்கும்.
ஏனெனில் குடும்பத்தினையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழிலையும் பார்க்க வேண்டும். யாரையும் எதற்காகவும் சாராமல் ஒரு வருமானம் வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதனை செயல்படுத்துவது தான் மிக கடினமான ஒன்றாக இருக்கும்.
11 நாடுகளுக்கு ஜாலி ட்ரிப்.. மளிகை கடை பெண் சாதித்தது எப்படி.. பணத்தை சேமிக்க சொல்லும் டிப்ஸ்!
ஆனால் அதனையும் செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார் தீபிகா வேல்முருகன்.
என்ன வணிகம்
ஸ்ரீ ரங்கத்தினை சேர்ந்த தீபிகா வேல் முருகன் தனது ஹோம்2செரிஷ் (Home2Cherish) என்ற பிராண்டின் மூலம் தனது கைவினை பொருட்களை விற்பனை செய்து வருகின்றார்.
பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் அலாதி பிரியம் இருக்கும். ஆனால் அதனையே தனது வணிகமாகவும் மாற்றி வருமானம் பார்த்து வருகின்றார் தீபிகா.
அம்மாவின் கோலம்
கோயம்புத்தூரில் வளர்ந்த தீபிகா வேல்முருகன், அவர்கள் வீட்டு வாசலில் தனது அம்மா அரிசி மாவு கோலம் போடுவதை கவனிப்பார். இவை வெவ்வெறு சிக்கலான வடிவமைப்பை கொண்டது என்பதோடு, மிக அழகானதாகவும் உள்ளது. தொடர்ந்து தனது தாயாரின் இந்த கோலத்தினை பல ஆண்டுகளாக பார்த்தே வளர்ந்து வந்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பதிவு
இதனை ஆரம்பத்தில் தனது வீட்டில் உள்ள பொருட்களில் வரைந்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதற்கு நல்ல வரவேற்பு பெறவே, பலரும் அதனை தொழிலாக செய்யவும், தங்களுக்கும் இது போன்று வேண்டும் என கேட்கத் தொடங்கியுள்ளனர். இதன் பிறகே வணிகமாகவும் பார்க்கத் தொடங்கியுள்ளார்.
எவ்வளவு வருவாய்?
மரத்தாலான பொருட்களில் அழகான வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார பொருட்களை விற்பனை செய்வதன் மூலம், இன்ஸ்டாகிராம் மூலம் வெற்றிகரமாக வணிகத்தினை செய்து வருகின்றார். மேலும் மாதத்திற்கு சுமார் 75,000 ரூபாய் வருவாய் ஈட்டி வருகின்றார்.
ஆடைகள் வடிவமைப்பு
சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதை விரும்பிய தீபிகா, தனது கல்லூரி படிப்பினையும் தொடர்ந்துள்ளார். ஆரம்பத்தில் கோயம்புத்தூரில் ஆடைகளை வடிவமைப்பு செய்து வந்துள்ளார். அதன் பிறகு திருப்பூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கினார்.
திருமணம்
2010ல் திருமணத்திற்கு பிறகு ஸ்ரீ ரங்கத்திற்கும் சென்றார். திருமணத்திற்கு பிறகு வடிவமைப்பு பணியினை விட்டவர், அந்த நேரத்தில் வடிவமைப்பில் இருந்த ஆர்வத்தை தொடர முடியாமல் போனது. அதிலும் இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு நிலைமை இன்னும் மாறியது என கூறுகிறார் 32 வயதான தீபிகா.
பொழுதுபோக்கு டூ வணிகம்
இரு குழந்தைகளுக்கு தாயான பிறகே தனது பொழுதுபோக்காக இருந்த ஒரு விஷயத்தினை வணிகமாகவும் மாற்ற தொடங்கியுள்ளார். அப்போது தான் தனது வீட்டில் இருந்த அலங்கார பொருட்களில் கோலம் வரையத் தொடங்கியுள்ளார். அதனை இன்ஸ்டாகிராமிலும் பதிவிடத் தொடங்கியுள்ளார்.
ஹேம்2செரிஷ் தொடக்கம்
நமது பாரம்பரியத்தினையே வெற்றிகரமான வணிகமாகவும் தொடங்கியுள்ளார். 2019ல் ஹேம்2செரிஷ் என்ற பிராண்டின் கீழ் தொடங்கியுள்ளார். அதன் மூலம் மரத்தாலான பொருட்களையும் விற்பனை செய்ய தொடங்கியுள்ளார்.
பல்வேறு பொருட்கள்
ஆரம்பத்தில் ஒரு தச்சர் அவரது கணவர் என சிலரின் ஆதரவுடன் தொடங்கிய வணிகம், நாட்கள் செல்ல செல்ல நல்ல வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. பலதரப்பிலும் இவரின் கைவண்ணம் ஈர்த்தது. ஆரம்பத்தில் சில பொருட்களில் மட்டுமே கைவண்ணத்தினை காட்டிய தீபிகா, தற்போது பல பொருட்களில் ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளார்.
அலங்கார படி
தீபிகாவின் கைவண்ணத்தில் ஜொலித்த ஒன்று, வீட்டு வாசலில் வைத்து அகல்விளக்கு ஏற்றுவதற்கு தகுந்தவாறு மரப்படிகள். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்தது. இதுவே அவரின் பெஸ்ட் செல்லிங் தயாரிப்புகளுள் ஒன்றாகவும் மாறியது .இது பூஜை அறைகளில் வைத்து வழிபடும் விதமாக பல்வேறு அளவுகளில் வடிவமைக்கப்பட்டது.
விலை நிலவரம் என்ன?
ஒரு சிலவற்றுடன் தொடங்கிய ஹோம் 2 செரீஷ், இன்று கோலப்படிகள், தொட்டில் கட்டை, சுவர்அலங்காரங்கள், மினி கதவுகள், பல்லாங்குழி, மனைப் பலகை என 50 வகையான தயாரிப்புகள் இருக்கின்றன. இவற்றின் விலை 1500 ரூபாயில் தொடங்கி 20,000 ரூபாய் வரை மதிப்பிலான தயாரிப்புகள் உள்ளது. இதனை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றார்.
கோலப்படியின் விலை என்ன?
குறிப்பாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள கோலப்படிகள் 3600 ரூபாயாகும். இந்தியாவில் மட்டும் அல்ல தற்போது வெளி நாட்டிலும் பலரும் இதனை விரும்ப ஆரம்பித்துள்ளனர். இதனால் இதனை வெளிநாடுகளுக்கும் சப்ளை செய்து வருகின்றார்.
எவ்வளவு நாள் ஆகும்?
ஒவ்வொரு ஆர்டரும் முடிக்க 30 நாட்கள் அவகாசம் எடுத்துக் கொள்வேன். ஏனெனில் ஆர்டர் எடுத்த பிறகே, அதற்கான வேலைகளை செய்யத் தொடங்குவேன். தச்சரிடமிருந்து மரச்சாமான் பெற்றபின், அதில் கோலமிடுதல், ஓவியங்களை வரைதல் வேலைகளை மேற்கொள்ளத் தொடங்குவேன்.
என்னென்ன மரங்கள்?
மாமரம், தேக்கு மரம், ரப்பர் மரக்கட்டைகளையே இந்த அலங்கார பொருட்களுக்கு பயன்படுத்துகிறேன். மரக்கட்டைகளின் தரத்தில் சமரசமே செய்து கொள்ள மாட்டேன். எனது தயாரிப்புகளுக்கு லைஃப் டைம் கேரண்டி உண்டு என கூறுகிறார்.
சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் தீபிகா ஒரு முன் உதாரணம்.
How did I turn my hobby into a business? Listen to Deepika who earns Rs.75 thousand per month
How did I turn my hobby into a business? Listen to Deepika who earns Rs.75 thousand per month/புள்ளி கோலங்களையே வருமானம் ஆக்கிய தீபிகா.. மாதம் ரூ.75,000 வருமானம்.. அசத்தும் ஸ்ரீரங்கம் பெண்!