வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: உக்ரைனின் சசிவ் யார் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து ரஷ்யா ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர்.
சசிவ் நகரில் சுமார் 12 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த நகரம் அமைந்துள்ள மாகாண கவர்னர், ரஷ்யா தொடர்ந்து ராக்கெட்கள் மூலம் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறினார்.
பொது மக்கள் குடியிருக்கும் நகரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதில் இதுவும் ஒன்றாகும். இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம், கிரமென்சுக் நகரில் உள்ள வணிகவளாகத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். இந்த மாத துவக்கத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் ராக்கெட் விழுந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து ராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மட்டும் தாக்குதல் நடத்தி வருவதாக கூறும் ரஷ்யா, இந்த தாக்குதல் குறித்து எதுவும் கூறவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement