தட்சிண கன்னடா : கல்லுாரி மாணவர்கள் உட்பட பலருக்கு கஞ்சா விற்பனை செய்த கேரளாவை சேர்ந்த 12 மாணவர்களை சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.தட்சிண கன்னடா மங்களூரு சூதர்பேட்டேயில் அபார்ட்மென்ட் ஒன்றில், கேரளாவை சேர்ந்த 12 மாணவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் நகரின் வெவ்வேறு கல்லுாரிகளில் படித்து வருகின்றனர்.இவர்கள், கல்லுாரி மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்வதாக, நகர குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து சி.சி.பி., இன்ஸ்பெக்டர் மகேஷ் பிரசாத், எஸ்.ஐ., ராஜேந்திரா தலைமையில் நேற்று அந்த வீட்டில் ரெய்டு நடத்தினர்.
அங்கிருந்த, சனுாப் அப்துல் காபூர், 21, முகமது ராசின், 22, கோகுல் கிருஷ்ணன், 22, ஷாரூன் ஆனந்த், 19, அனந்து, 18, அமால், 21, அபிேஷக், 21, நிதல், 21, ஷாஹித், 22, பாஹித் ஹபிப், 22, முகமது ரிசின், 22, ரிஜின் ரியாஸ், 22, ஆகிய 12 பேரை கைது செய்தனர்.அப்போது, அங்கிருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 900 கிராம் கஞ்சா, 4,500 ரூபாய் ரொக்கம், 11 மொபைல் போன்கள் உட்பட 2.85 லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்களை பறிமுதல் செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கைதான 12 பேரில், 11 பேர் போதைப் பொருள் அடங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement