தனுஷ் சாய்பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் பெரிய ஹிட்டடித்த நிலையில், இந்த பாடலுக்கு நடனமாடியது குறித்து சாய்ப்பல்லவி வெளியிட்டுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழில் கடந்த 2005-ம் மீரா ஜாஸ்மின், பிரசன்னா நடிப்பில் வெளியான கஸ்தூரி மான் என்ற படத்தில் கல்லூரி மாணவியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து, ஜெயம்ரவியின் தாம்தூம் படத்தில் நடித்த அவர், 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாக பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த படம் மலையளத்தில் வெளியாகியிருந்தாலும் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அதற்கு காரணம் மலர் டீச்சர் வேடத்தில் நடித்திருந்த சாய் பல்லவிதான் காரணம். அதன்பிறகு தமிழில் தியா என்ற படத்தில் நடித்த அவர், 2018-ம் ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்த நிலையில். இந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரறே்பை பெற்று யூடியூப்பில் பார்வையாளர்களை குவித்து சாதனை படைத்தது. மேலும் பல நாட்களாக இந்த பாடல் யூடியூப் தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது.
அதன்பிறகு தமிழ் தெலுங்கில் மாறி மாறி நடித்து வரும் சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் தயாராகியுள்ள கார்கி படம் வரும் 15-ந் தேதி வெளியாக உள்ளது. இது தொடர்பாக கலாட்டா தமிழ் யூடியூப் தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த அவர், நடனம் மற்றும் அதில் இருக்கும் சவால்கள் குறித்து பேசியிருந்தார்.
இதில் அவர் கூறுகையில், சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது ஆர்வமாக இருந்ததால், நடன வகுப்புகளுக்கு செல்வது போட்டிகளில் பங்கேற்பது என்று இருந்தேன். அப்போது எடுத்த அந்த முயற்சிதான் இப்போது என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது. இதில் ஷாம் சிங்க ராய் படத்தை தவிர மற்ற அனைத்து படங்களிலும் நடனகாட்சி எடுக்கும்போது எனக்கு மாதவிடாய் நாளாக வந்தருக்கிறது.
மாரி படத்தில் ரவுடி பேபி பாடல் எடுக்கும்போதும் எனக்கு அந்த நாட்கள்தான். அந்த பிரச்சினையும் தாண்டி அதில் நடமாடியதால் இப்போது அந்த பாடல் மில்லியன் பார்வையாளர்களை கடந்து கொண்டாட வைத்துள்ளது. ஒரு முக்கியமான விஷயத்தில் இருக்கும்போது இந்த மாதிரி நாளை மனம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாது. அதற்கு ஏற்றாற்போல் உடலை தயார்படுத்திக்கொள்வேன்.
வேலை முடிந்தவுடன் சோர்வு அதிகமாக இருக்கும் அப்போ என் தந்தைதான் எனக்கு கால் பிடித்துவிட்டு ஆறுதலாக இருப்பார் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“