பெங்களூரு : ‘சாம்ராஜ் பேட்டின், ஈத்கா மைதானம் விஷயத்தில் விவாதம் ஏற்படுவதற்கு, பெங்களூரு மாநகராட்சியே காரணம்’ என, ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.இது குறித்து, ஆம் ஆத்மியின் பெங்களூரு பிரிவு செயலரும், சாம்ராஜ்பேட் தலைவருமான ஜெகதீஷ் சந்திரா கூறியதாவது:மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், சாம்ராஜ்பேட் ஈத்கா மைதானம் தொடர்பாக, முன்னுக்கு பின், முரணான கருத்துகளை தெரிவிக்கிறார்.
மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.ஒரு முறை இந்த மைதானம், வக்ப் வாரியத்தின் சொத்து என்கிறார்; மற்றொரு முறை மாநகராட்சி சொத்து என்கிறார்.சரியாக புரிந்து கொள்ளாமல், பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார். இந்த மைதானத்தில், ஆடுகள் வியாபாரம் செய்யும் போது, வரி வசூலிக்கும் மாநகராட்சி, அதன்பின் அந்த இடத்தை சுத்தம் செய்யும் நடைமுறை, பல ஆண்டுகளாக உள்ளது.
ஆனால், இனி மாநகராட்சி சுத்தம் செய்யாது என்கிறார்.மைதானத்தை சுத்தம் செய்யா விட்டால், சுற்றுப்புற பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலத்தில் துாய்மைக்கு, முக்கியத்துவம் கொடுக்கா விட்டால், நோய்கள் அதிகரிக்கும். இதை துஷார் கிரிநாத் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement