மின் கசிவால் தீ விபத்து அலங்கார பொருட்கள் சேதம்| Dinamalar

அரியாங்குப்பம் : மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள திருமண நிகழ்ச்சி அலங்கார பொருட்கள் எரிந்து சாம்பலாயின.அரியாங்குப்பம் அடுத்த சின்னவீராம்பட்டினத்தை சேர்ந்தவர் அருண்குமார். இருவர், திருமண நிகழ்ச்சிகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், அலங்கார பொருட்கள் வைத்திருந்த ஷெட் நேற்று திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், ஷெட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள அலங்கார பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.