நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்திய பங்கு சந்தைகள் பலத்த ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது. குறிப்பாக கடந்த மே மாதத்தில் இருந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பி எஸ் இ ஸ்மால் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடானது, 13% சரிவினைக் கண்டுள்ளது.
குறிப்பாக ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகள் சென்செக்ஸ்-ஐ விட பின் தங்கி விட்டன.
டாடா குழுமத்தின் இந்த பங்கினை வாங்கி போடுங்க.. 3 மாதத்தில் நல்ல லாபம் கிடைக்கும்?
இது தான் நியதி
சாதாரண காலகட்டத்தில் சென்செக்ஸ் குறியீடுகள் ஏற்றம் காணும் போது, ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகள் நல்ல ஏற்றத்தினை காணும். தற்போது சென்செக்ஸ் குறியீடானது சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் சரிவினைக் கண்டுள்ளன. இது இயற்கையானதே. இந்த திருத்தம் எப்போதும் இருக்கும் ஒன்று தான்.
என்ன காரணம்?
உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை, பணவீக்க பிரச்சனை, முதலீடுகள் வெளியேற்றம் என பல காரணிகளுக்கு மத்தியில் பங்கு சந்தையானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன. இது இந்திய பங்கு சந்தையில் மட்டும் அல்ல, சர்வதேச பங்கு சந்தைகளும் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.
ஸ்மால் கேப் & மிட் கேப்
பி எஸ் இ ஸ்மால் கேப் குறியீடானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து , 3816.95 புள்ளிகள் அல்லது 12.95% சரிவினைக் கண்டுள்ளது. இதே மிட் கேப் குறியீடானது 2314.51 புள்ளிகள் அல்லது 9.26% சரிவினைக் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 3771.98 புள்ளிகள் அல்லது 6.47% சரிவினைக் கண்டுள்ளது.
ஸ்மால் கேப் & மிட் கேப் சரிவு
ஆக சென்செக்ஸ்- ஐ விட மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் சரிவினைக் கண்டுள்ளன. இதற்கிடையில் தற்போதைய நிலையும் கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. இதனால் இன்னும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மால்கேப் குறியீட்டின் 52 வார குறைந்தபட்ச லெவல் 23,261.39 லெவல் ஆகும். இது ஜூன் 20 அன்று எட்டியது. இதே ஜனவரி 18 அன்று 31,304.44 என்ற லெவலை எட்டியது.
சென்செக்ஸ் வீழ்ச்சி
இதே மிட்கேப் குறியீடானது ஜூன் 20 அன்று அதன் 52 வார குறைந்த லெவனான 20,804.22 என்ற லெவலை எட்டியது. இதன் உச்சம் 2 7,246.34 என்ற லெவலை கடந்த அக்டோபர் 19 அன்று எட்டியது.
சென்செக்ஸ் 52 வார ஜூன் 17 அன்று 50,921.22 என்ற லெவலை தொட்டது. இது கடந்த ஆண்டு அக்டோபர் 19, 2021ல் 62,245.43 என்ற லெவலை எட்டியது.
ஏற்றம் காணலாம்
மீடியம் டெர்மில் அன்னிய முதலீடுகள் மீண்டும் லார்ஜ் கேப் பங்குகளில் மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தைப் பொறுத்தவரையில் நமக்கு பின்னால் மிக மோசமான நிலை உள்ளது. எனவே இங்கிருந்து இந்திய பங்கு சந்தையில் ஒரு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். அன்னிய முதலீடுகள் மீண்டும் சந்தைக்கு வந்தால், நீண்டகாலத்திற்கு ஏற்றம் காணலாம். நீண்டகால மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் விஞ்சும்.
BSE Smallcap, midcap falls 13% in so far this year, worse than sensex
BSE Smallcap, midcap falls 13% in so far this year, worse than sensex/முதலீட்டாளார்களின் செல்வத்தை வாரி சென்ற சந்தை.. இனியேனும் சரியாகுமா?