கோழிக்கோடு: கேரளா வைச் சேர்ந்த மேடை நாடகம் மற்றும் டி.வி நடிகை சத்யா ராஜன் (66) திடீரென மரணம் அடைந்தார். அவரது மூளையில் கட்டி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சைக்குப் பிறகு அவர் ஒரு மாதத்துக்கு மேல் கோமாவில் இருந்ததாக கூறப்படுகிறது. வெங்கராவை சேர்ந்த சத்யா ராஜன், மலையாள திரைப்பட நடிகர்கள் குதிரவட்டம் பப்பு, நெல்லிக்கோடு பாஸ்கரன், மாமுக்கோயா உள்பட சிலருடன் இணைந்து நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட நாடகக்குழுக்களில் பணியாற்றி, 5 ஆயிரம் நாடகங்களில் நடித்துள்ளார். மறைந்த சத்யா ராஜனுக்கு கணவர் வி.பி.ராஜன், மகள் திவ்யா உள்ளனர்.