சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புயுள்ளது என்று கூறியுள்ளனர்.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர்.