வருமான வரி தாக்கல் செய்யும்போது கவனிக்க வேண்டியது என்ன.. 5 முக்கிய விஷயங்கள் இதோ!

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு விரைவில் நெருங்கி வருகின்றது.

கடந்த 2021 – 22ம் நிதியாண்டு அல்லது 2022 23ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-க்கு தேதி கடைசி நாளாகும்.

சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் தங்கள் கணக்குகளை தணிக்கை செய்ய தேவையில்லாத பிற தனி நபர்கள் ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்தியாவின் சொகுசான 6 ரயில்கள் எது தெரியுமா.. அதன் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

எப்போது தாக்கல் செய்யணும்?

எப்போது தாக்கல் செய்யணும்?

கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோர் அக்டோபர் 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இதில் சர்வதேச பரிவர்த்தனை அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள நபர், கணக்காளரிடம் இருந்து அறிக்கை பெற்று, நவம்பர் 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை சமர்பிக்க வேண்டும்.

முன் நிரப்பப்பட்ட படிவம்

முன் நிரப்பப்பட்ட படிவம்

இப்படி வருமான வரி தாக்கல் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? என்பதை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

வருமான வரி துறையானது வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதை எளிதாக்குவதற்கு முன் நிரப்பட்ட படிவங்களை வழங்கினாலும், நீங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கையில் வைத்திருக்க வேண்டும். முன் நிரப்பட்ட படிவத்தில் உள்ள ஒவ்வொரு விஷயத்தினையும் சரிபார்க்க வேண்டும்.

அனைத்து வருமானத்தையும் உறுதி படுத்துங்கள்
 

அனைத்து வருமானத்தையும் உறுதி படுத்துங்கள்

உங்களின் அனைத்து வருமான ஆதாரங்களையும் கொடுப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். இது எந்தவொரு அபராதத்தையும் தவிர்க்க இது உங்களுக்கு உதவும்.

உங்கள் வருமான வரி கணக்கை சமர்பிக்கும்போது, படிவம் 16 மற்றும் 26AS-ல் கழிக்கப்பட வேண்டிய வரியை ஒப்பிடவும்.

டிடிஎஸ்

டிடிஎஸ்

படிவம் 16 மற்றும் 26AS-ல்உள்ள டிடிஎஸ் தொகை ஒரே மாதிரியாக இல்லாவிட்டால், நிறுவனத்தினை தொடர்பு கொண்டு அதை சரி செய்து கொள்ளவும்.

படிவம் 16

படிவம் 16

இது உங்கள் வேலை வழங்குனரால் தயாரிக்கப்பட்ட ஆவணமாகும். இந்த பார்ம் (FORM 16) என்பது வருமான வரி தொடர்பானது. நிறுவனங்கள் தங்கள் சம்பளம் பெறும் நபர்களின் வரி விலக்கு குறித்த தகவல்களை வழங்க FORM 16 பயன்படுத்தப்படுகிறது.

பார்ம் 26AS

பார்ம் 26AS

படிவம் 26AS என்பது டிசிஎஸ், டிடிஎஸ் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் போன்ற வரி தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒவ்வொரு நிதியாண்டுக்கும் பான் எண்ணின் அடிப்படையில் பதிவு செய்யும் ஒரு ஒருங்கிணைந்த அறிக்கையாகும். தொடர்புடைய நிதியாண்டின் போது பெறப்பட்ட பணத்தைத் திரும்பப்பெறுதல் பற்றிய விவரங்களும் இதில் உள்ளன.

எந்த தாக்கல்?

எந்த தாக்கல்?

வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்பு புதியதா அல்லது பழையதா என்பதை திட்டமிடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

filed ITR for AY2022 – 23? What are the top 5 things to look out for?

filed ITR for AY2022 – 23? What are the top 5 things to look out for?/வருமான வரி தாக்கல் செய்யும்போது கவனிக்க வேண்டியது என்ன.. 5 முக்கிய விஷயங்கள் இதோ!

Story first published: Sunday, July 10, 2022, 20:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.