சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதைக் கேட்டு அமைச்சர் பொன்முடி விழுந்து விழுந்து சிரித்த வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆகியோர் ஒன்றாக சிரித்து கொண்டு இருக்கும் வீடியோவை அமைச்சர் பொன்முடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியின் காதில் ஏதோ ஒன்றை கூறுகிறார். அதைக் கேட்டவுடன் அமைச்சர் பொன்முடி விழுந்து விழுந்து சிரிக்கிறார். முதல்வர் பொன்முடி அளவுக்கு இல்லாவிட்டாலும் லேசாக சிரிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் அவரது தனி உதவியாளரை அழைத்து ஏதோ கூறுகிறார். அப்போது முதல்வர், அமைச்சர் பொன்முடி, தனி உதவியாளர் ஆகிய 3 பேரும் சிரிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவைப் பதிவிட்டு “அப்படி என்னதான் சொன்னீங்க” முதல்வரே என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தலைவர்… pic.twitter.com/fqDzgovvdm
— Dr.K.Ponmudy (@KPonmudiMLA) July 9, 2022