தமிழக பாஜக செயற்குழு உறுப்பினரான சவுதாமணி, கடந்த ஜனவரி மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில், மதவாத வெறுப்பைத் தூண்டும் வகையில், ஒருவர் பேசிய காணொலியைப் பகிர்ந்து, கருத்தைப் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, 2 பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுதாமணி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் சவுதாமணியை நேற்று மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.