‘ஹீரோ டர்ட் பைக்கிங் சேலஞ்ச்’ | பைக் ரைடிங் இளைஞர்களுக்கு சவாலான போட்டி – ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: உலகின் மாபெரும் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் ‘ஹீரோ டர்ட் பைக்கிங் சேலஞ்ச்’ (Hero Dirt Biking Challenge (HDBC) போட்டியை அறிவித்துள்ளது. ஓர் அசல் உபகரண உற்பத்தி நிறுவனம் பான்-இந்தியா அளவில் நடத்தும் முதல் திறமை சவால் இது.

இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:

‘ஆஃப்-ரோடு’ பந்தயத்தில் சாதிக்க விரும்புகிற வளரும் ரைடர்கள், ஆர்வலர்கள், அமெச்சூர்களுக்கு இது சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இதற்காக, நாட்டின் சிறந்த அமெச்சூர் ஆஃப்-ரோடு ரைடர்களைக் கண்டறிய 45 நகரங்களை இது சென்றடைகிறது. இதில் வெற்றியாளர் மற்றும் 2, 3-வது இடம் பெறுபவர்கள் பிரபலமான Hero Xpulse 200 4V மோட்டார் சைக்கிள்களை பரிசாகப் பெறுவார்கள். ஹீரோ நிறுவனத்தின் ரூ.20 லட்சம் மதிப்பிலான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களையும் பெறலாம். வரும் நவம்பரில் இப்போட்டி MTV மற்றும் Voot மூலம் ஒளிபரப்பப்படும்.

இதற்கான அறிவிப்பை வெளியிட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை வளர்ச்சி அதிகாரி (CGO) ரஞ்சிவ்ஜித் சிங், “ஹீரோ நிறுவனத்தின் ரேலி-ரேஸிங் அணி, சர்வதேச ரேலி பந்தயங்களில் இந்தியாவின் கொடியை பறக்கவிட்டிருக்கிறது. இது தற்போது இந்திய இளைஞர்களை சாதிக்க அழைக்கிறது. இது பல சாதனையாளர்களை உருவாக்கும்” என்றார்.

இதில் பங்கேற்க பதிவு செய்வதற்கும், மேலும் விவரங்கள் அறியவும் www.hdbc.in இணையதளத்தை காணலாம்.

45 நகரங்களில் முதல்சுற்று போட்டிகளும், பின்னர் 18 நகரங்களில் பிராந்திய சுற்றுகளும் நடைபெறும். முதல் 100 ரைடர்கள், 5 நாள் பிராந்திய பூட்கேம்ப்க்கு செல்வார்கள், இம்முறை பிரபல இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ் பயிற்சி அளிப்பார். பூட்கேம்ப் ஒரு பந்தயத்துடன் முடிவடையும். முதல் 20 பங்கேற்பாளர்கள் ஜெய்ப்பூரில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிநவீன R&D மையமான உலகத்தரம் வாய்ந்த புத்தாக்க தொழில்நுட்ப மையத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள். இறுதிப்போட்டிக்கு 5 நாட்களுக்கு முன்பு, ஹீரோ மோட்டோ ஸ்பார்ட்ஸ் டீம் ரேலி மூலம் சிறந்த ரைடர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, இறுதியில் வெற்றியாளரை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.