பெங்களூரு : ”நாட்டில் 28 கோடி பேருக்கு ‘இ — ஷ்ரம்’ கார்டுகள் அளிக்கப்பட்டுள்ளது,” என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.பெங்களூரில், நேற்று நடந்த மாநில பா.ஜ., தொழிலாளர் பிரிவு செயற்குழு கூட்டத்தில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பங்கேற்று பேசியதாவது:’ஒரு நாடு ஒரு கார்டு’ திட்டத்தால், நகர் பகுதிகளுக்கு பிழைக்க வரும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், எந்த நகருக்கு சென்றாலும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்; சுய தொழில் துவங்க கடனுதவி வழங்கப்படும்.
அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் எந்த வித பிரச்னையுமின்றி கிடைக்கும் வகையில், நாட்டில் 28 கோடி பேருக்கு, ‘இ — ஷ்ரம்’ கார்டுகள் அளிக்கப்பட்டுள்ளன.பா.ஜ., அரசு, ஏழைகளுக்காக திட்டம் கொண்டு வருகிறது. இதற்கு முன் நாட்டில் ஆட்சி செய்த அரசுகள், ஏழைகளுக்காக பேசியதே தவிர, அவர்கள் மீது அக்கறை காண்பிக்கவில்லை. அவர்களின் முன்னேற்றத்துக்காக, எந்த முக்கிய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.நாடு முழுதும், கொரோனா தடுப்பூசி போடப்பட்ட விஷயத்தை, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, குறிப்பிட்ட போது, அங்குள்ள அமைச்சர்கள் ஆச்சரியப்பட்டனர்.
காஷ்மீருக்கான 370வது சட்டத்தை ரத்து செய்த போது, நாட்டின் எந்த இடத்திலும் பயங்கரவாதம் நடக்கவில்லை.பா.ஜ., அரசின் மீது ஊழல், முறைகேடு குற்றச்சாட்டும் இல்லை. மக்களின் கவனத்தை திசை திருப்ப, எதிர்க்கட்சிகள் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். நல்லாட்சி நடப்பதால், மத்தியில், மாநிலத்தில் பா.ஜ., அரசு மீண்டும் வரும்.உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
நம் மாநிலத்திலும், பசவராஜ் பொம்மை அரசு நல்லாட்சி நடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி வழி காட்டுதலில், மாநில அரசு நன்றாக நடக்கிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, பொய் பேசுகிறார். அவரது 75 வது பிறந்தநாளை, ‘சித்தராமோற்சவம்’ என்ற பெயரில் கொண்டாடுகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கு முடிவு கட்ட முயற்சிக்கிறார்.பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்திய திட்டங்களை, மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். நாட்டில் உண்மையான ஏழைப் பங்காளன் இருக்கிறார் என்றால், அது நரேந்திர மோடிதான்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement