அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதை சமயத்தில் ஓபிஎஸ் அதிமுக பொது குழு கூட்டத்திற்கு தடைக்குரிய வழக்கின் தீர்ப்பும் நாளை காலை 9 மணிக்கு வரவுள்ளது.
இந்த தீர்ப்பில் அதிமுக பொது குழு கூட்டத்திற்கு ஏதேனும் நிபந்தனைகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் அதிமுகவின் பொதுக்குழுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் விடுத்துள்ள அறிவிப்பில்,
“சென்னை, வானகரம் அருகில் நாளை (11.06.2022 ) நடைபெறும் நிகழ்ச்சியையொட்டி கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும் என்பதால் போக்குவரத்து மெதுவாக செல்லவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
ஆகவே, வாகன ஓட்டிகள் , பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரையிலான சாலையில் நாளை (11.07.2022 ) காலை 06.00 மணி முதல் மாலை 04.00 மணி வரையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வண்ணம், தங்களது பயணங்களை முன்னேற்பாடாக மாற்றி அமைத்துக் கொள்ளவும் , மாற்று பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.